மேலும் அபிவிருத்திப் பணிக்கு ரேவடி கழகம் முயற்சி, பலர் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளனர்!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2017 (வெள்ளிக்கிழமை)
(மூலப் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது)
கழகத்திற்கென காணி கொள்வனவு செய்தலும் மேலும் இதர அபிவிருத்திப் பணிகளும்
அன்புடையீர்,
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக விசேட பொதுக் கூட்டம், தகுந்த அறிவித்தலின் பின்னர், கடந்த 19.01.17 அன்று கழக கடற்கரை மைதானத்தில் மாலை சுமார் 6 மணியளவில் கழகத் தலைவர் திரு.ஞானேந்திரராசா தலைமையில் இடம்பெற்றது.
கூட்டத்தில் தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
அங்கத்தவர்களால் இப்பிரதேசத்தில் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட கடற்கரை மைதானம், பூங்கா மற்றும் இவற்றுடன் கூடிய இதரபகுதிகளை மேலும் எவ்வாறு தரம்படுத்துவது,
மற்றும்
வல்வை நகரசபையால் கடந்த மாதம் எமது ரேவடி கடற்கரை மைதானத்தைச் சுற்றி சுற்றுல்லாத் திட்டத்தின் கீழ் சுமார் 2 மில்லியன் ரூபா செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் மேலும் எவ்வாறு இவ்வாறான வேலைத் திட்டங்களை உள்வாங்குவது என்றும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் சகல அங்கத்தவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மேற்குறித்த வேலைத்திட்டங்களை மேலும் சிறப்புற தரமுயர்த்த கழகத்துக்கென ரேவடிப் பகுதியில் ஒரு காணி வாங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணி ரேவடி ஐக்கிய விளையாட்டுக் கழக மற்றும் ரேவடி சார் சகல பொதுத் தேவைகளுக்கும் பயன்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த எமது முடிவினையடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கழக குடும்ப்பத்தினர், தனிநபர்கள் தமது பங்களிப்பினை உறுதிப் படுத்தியுள்ளனர். சிலர் ஏற்கனவே கழகத்தின் பேரில் ஆரம்பிக்கபட்டுள்ள இலங்கை வங்கிக் கணக்கில் பணத்தினை வைப்பிலிட்டு எமது முயற்சியை ஊக்கப் படுத்தியுள்ளனர்.
அதிரூபசிங்கம் குடும்பம் – ரூபா 2,00,000 /-
மு.யோகராசா குடும்பம் (ரூபப்பா) - ரூபா 1,50,000 /-
மு. ஆனந்தராசா குடும்பம் (திலகப்பா) - ரூபா 1,50,000 /-
துரைசாமி சிவகுமரன் - ரூபா 1,00,000/-
ச.ஞாநேஸ்வரராசா - ரூபா 50,000/-
செ,கரீந்திரகுமார் - ரூபா 50,000/-
சி.நிசாந்த் - ரூபா 50,000/-
ச.கலைநேசன் - ரூபா 50,000/-
மு.அழகராசா - ரூபா 25 ,000/-
ஆகவே வல்வெட்டித்துறை நகரசபைப் பிரதேசத்தில் சிறந்தவொரு சுற்றுல்லா மையம் என மிகவும் துல்லியமாக இனங்காணப்பட்டுள்ள இந்த எமது பகுதியை மேலும் மிகச் சிறந்ததொரு பகுதியாக எம்மால் இனங்காட்ட தங்களின் (ரேவடி கழக சகல உறுப்பினர்களின்) பங்கையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.