'வடக்கின் சவாலர்கள்' உதைபந்து - பாடும்மீனை வீழ்த்தி இறுதியில் யங்ஹென்றிஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2017 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மின்னொளியிலான வடக்கின் சவாலர்கள் ( Nothern challengers) வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட நேற்றைய அரை இறுதி ஆட்டத்தில் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் மோதிக்கொண்டது.
இரு அணிகளும் முதல் பாதியாட்டத்தில் பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் யங்ஹென்றிஸ் அணிக்கு தண்ட உதைப்பிலான கோல் போடும் வாய்ப்பு ஏற்பட, அதனை மகீபன் கோல் போட முற்பட்ட வேலையில் பாடும் மீன் கோல் காப்பாளரால் பந்து லாவகமாக நிறுத்தப்பட்டது. முதல் பாதியாட்டம் எவ்வித கோல்களும் பெறப்படாத நிலையில் நிறைவுற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தில் யங்ஹென்றிஸ் ஆதிக்கம் இருந்தது. ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் யங்ஹென்றிஸ் வீரர் அனோஜன் அதிரடியான கோல் ஒன்றைப் போட ஆட்டம் சூடுபிடித்தது. அடுத்த 43வது நிமிடத்தில் கோல் போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார் யஙஹென்றிஸ் அணி வீரர் மகீபன்.
ஆட்டத்தை மாற்ற போரடியது பாடும் மீன் போட்டியின் நேர முடிவின் 59வது நிமிடத்தில் பாடும் மீன் அணியின் 12ம் இலக்க வீரரின் நேர் உதைப்பு மூலம் சாந்தனால் கோல் போடப்பட்டது. இறுதி ஆட்ட நேர முடிவில் 2:1என்ற கோல் அடிப்படையில் பாடும் மீன் அணியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இளவாலை யங்ஹென்றிஸ் அணி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.