20 உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2018 (புதன்கிழமை)
உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவிருந்த 8356 உறுப்பினர்களின் எண்ணிக்கை 325 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்களுக்கான பதவி தீர்மானிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.(newsfirst.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.