அமரர் நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்த உதைபந்து இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2017 (வெள்ளிக்கிழமை)
அமரர்நடராசா வைத்திலிங்கம் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் சுழல் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் முதல் போட்டிகள் இன்று தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது போட்டியில் வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்ற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் ரூபன் சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம்
இரண்டாவது போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது.இந்த ஆட்டத்தில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக்கம் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் கபிலன் இளங்கதிர் விளையாட்டுக்கழகம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.