ரேவடிக் கடற்கரை தற்பொழுது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
ரேவடிக் கடற்கரை பிரதான பாதையான சுங்க வீதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறையின் கடற்கரை சாலையின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைக்குரிய சாலையும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ரேவடிக் கடற்கரையில் ஏற்கனவே பயணிகள் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில பயணிகள் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் கடற்கரை மைதானத்தை ஒளியூட்டும் வண்ணம் சூரிய கல மின்குமிழ்கள் மைதானத்தை சுற்றி நாட்டப்பட்டுள்ளன.
அத்துடன் ரேவடிக் கடற்கரையின் மேற்கு பக்கத்தை ஒட்டியுள்ள கடற்கரையும் திருத்தியமைமக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் ரேவடிக் கடற்கரையிலிருந்து உதயசூரியன் கடற்கரை வரையான பகுதியில் வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
சூரிய கல மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ள ரேவடிக் கடற்கரை
படத்தில் ரேவடி கடற்கரைக்குரிய சாலை மற்றும் இருக்கைகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.