வல்வை விளையாட்டுக்கழகத்தினால் அமரர் யோகசந்திரன் (முன்னாள் அதிபர் சிதம்பரக் கல்லூரி ) அவர்களின் ஞாபகார்த்தமாக 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வந்தது. இந்த போட்டியானது அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியாக அமைகின்றது.
இன்று காலை இரண்டாம் கட்டமும் மாலை இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தின் நிறைவில் இரு அணிகளும் தலா 3 கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தமையால் நடுவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டது. தண்ட உதையில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
2 ஆம் இடத்தை மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகமும், 3ஆம் இடத்தை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டது.
இந்த தொடரின் சிறந்த வீரர் - எட்வேட் எட்வின் (ரகு) (அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம்), தொடர் நாயகன் - அனுராக் காந்தன் (கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம்), இறுதிப் போட்டியின் சிறந்த நாயகன் - நிமால் (மணல்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இச்சுற்றுப் போட்டியானது திரு.மு.தங்கவேல் அவர்களின் ஏற்பாட்டினால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காரத்தேயில் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய முரளி பரிதியனுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.M. K. சிவாஜிலிங்கம் அவர்களினால் 5000 /- ரூபா பணப்பரிசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. அத்துடன் புலமைப் பரிசில் சித்தியடைந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த கலைநிலவனுக்கு 2000/- ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.