பொலிகை பாரதி உதைபந்து- இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2016 (சனிக்கிழமை)
பருத்திதுறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் மூன்றாம் இடத்திற்கான ஆட்டமும் இறுதியாட்டமும் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
முதலாவதாக நடைபெறவுள்ள மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. அடுத்ததாக நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.
இப்போட்டிகள் சம்பந்தமான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.