வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக உதைபந்து - வல்வை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியில் (Northern Challengers Cub) அணிக்கு 09-நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் தொடர் தற்பொழுது நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
இப்போட்டியின் முதலாவது போட்டியாக வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வரணி யூத் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்ட முடிவில் 1:0 என்ற கோல்கணக்கில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.