இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 2016ம் ஆண்டு விருதினை வல்வையைச் சேர்ந்த திரு.சேந்தன் பெற்றுக்கொண்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/08/2016 (சனிக்கிழமை)
திரு.சேந்தன் திருநாவுக்கரசு தனது ஆரம்பக் கல்வியை வல்வை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும், உயர் கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் கற்று கட்டுபெத்தை வளாகத்தில் தனது பட்டப்படிப்பு படித்து பொறியியலாளர் ஆனார்.
தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு தான் படித்த துறைசார்ந்த பனிக்கட்டி தொழிற்சாலையை பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் ஆரம்பித்தார்.
இது தொண்டைமானாறில் இருந்து வடமராட்சி தென்மராட்சிப் பகுதி, யாழ்ப்பாண நகர மீன்பிடி தொழிலாளர்கள் பயனடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
18. 08. 2016 அன்று கொழும்பு Galadari Hotel இல் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் திரு.சேந்தன் அவர்களுக்கு அவரது சேவையைப்பாரட்டி விருது வழங்கி கௌரவித்தனர்.
இவர் முன்நாள் பட்டினசபைத் தலைவர் திரு.ச.நடனசிகாமணி அவர்களின் பேரனும் க.திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் மகனுமாவார்.
அத்துடன் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின்(Images of Valvai) செயற்பாட்டுக் குழுவினரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாமும் அவரை வாழ்த்துகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
தி.யோகசபாபதி (Sri Lanka)
Posted Date: August 23, 2016 at 20:12
சேந்தனுக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ளோருக்கும் எமது வாழ்த்துக்கள்!
k.s.thurai (denmark)
Posted Date: August 21, 2016 at 22:28
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்தி மகிழ்கிறேன்.. மேலும் சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்...
T.Senthan (Sri lanka)
Posted Date: August 21, 2016 at 04:19
செய்தியை பிரசுரித்தமைக்கு நன்றி.
அன்புடன் தி. சேந்தன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.