பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக வெள்ளவத்தைக்கும், வெள்ளவத்தையிலிருந்து பருத்தித்துறைக்கும் இடையிலான பகல்நேர தனியார் சொகுசு பஸ் சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இரு வழிகளிலும் இடம்பெற்றுவரும் இச் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி பருத்தித்துறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதுடன் அங்கிருந்து காலை 8 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு வெள்ளவத்தையை வந்தடையும்.
அதேவேளை கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கொட்டாஞ்சேனையை 8 மணிக்கு வந்தடைந்து அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தையும் பிற்பகல் 4 மணிக்கு பருத்தித்துறையையும் சென்றடையும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.