உலகில் காணப்படும் முக்கிய 30 துறைமுகங்களில் கொழும்புத் துறைமுகம் 26வது இடத்தில் உள்ளது. கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீண ரணதுங்கா இதனை தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகார சபையின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.இந்நிலையில் 26வது இடத்தில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தை 2020ஆம் ஆண்டு 20வது இடத்திற்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு துறைமுகத்தின் வருமானம் 6 பில்லியன் என துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.