ரேவடி ஞாயிறு நிகழ்வுகள், எவரும் அனுசரணை வழங்கலாம், நேற்றைய நிகழ்விற்கு வல்வெட்டித்துறை.org அனுசரணை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2014 (திங்கட்கிழமை)
கடந்த சில மாதங்களாக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் பிரதி ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளிற்கும் எவரும் அனுசரணை வழங்க முடியும் என இந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களான வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
குறித்த அறிவிப்பு நேற்று நடைபெற்ற சிறுவர்களிற்கான வினோத உடைப்போட்டியின் போது உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே வேளை நேற்று நடைபெற்ற சிறுவர்களிற்கான வினோத உடைப்போட்டிற்கான அனுசரணையை எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ORG வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.