இலங்கை மத்திய வங்கி தலைமைத்துவ பண்புகள், குழுவாக இயங்கும் ஆற்றல் இளம் பட்டதாரிகளை தரம் 1 இல் பணியாற்றுவதுக்கு முகாமைத்துவ பயிலுனர்களாக இணைத்து கொள்ள எதிர்பார்த்துள்ளது.
தகமைகள்
1.கீழ் வரும் பாடங்களில் இரண்டாவது உயர் வகுப்பு (2nd Class Upper Division ) சித்தியுடன் அல்லது 4.0 GPA வழங்குமிடத்தில் குறைந்தது 3.5 GPA பெற்றிருந்து சிறப்பு பட்டம் அல்லது சாதாரண பட்டம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பெற்றிருத்தல் வேண்டும்.
-பொருளியல்/விவசாய பொருளியல் - வர்த்தகம்/மேலாண்மை(Management) - புள்ளிவிபரம்/கணிதம்
-தகவல் தொழில்நுட்பம்/கணனி விஞ்ஞானம் - சட்டம் - பொறியியல் -பொது/வணிக நிர்வாகம்
-கணக்குபதிவியல்/வங்கி/நிதி
இல்லாவிடின்
மேலே குறிப்பிடப்பட்ட பாடங்களில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் முதுகலை பட்டம் அல்லது அதுக்கு மேற்பட்ட உயர் பட்டமொன்றை பெற்றிருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதாரி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அன்று 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்
இலங்கை பரீட்சைதிணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிப்பரீட்சையினூடு தெரிவு செய்யப்பட்டு பின்னர் ஒன்று அல்லது இரண்டு நேர்முக தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்படும். போட்டிப்பரீட்சையானது பொதுஅறிவு,நுண்ணறிவு,பகுத்த்தறிந்து எழுதுதல் என்று மூன்று வினாத்தாள்கள் நடைபெறும்
* பயிற்சிக்காலமான ஒரு வருடத்தில் அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து மாதம் 55,000 வழங்கப்படும்.
* ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வோர் தரம் 1 பணியாளர்களாக கருதப்படுவர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.