நிழல்கள் அமைப்பால் திருமலை சந்தனவெட்டையில் மர நடுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2017 (சனிக்கிழமை)
திருகோணமலை சந்தனவெட்டை ஶ்ரீ ஐங்கரன் வித்தியாலத்திற்கு நிழல்கள் அமைப்பின் உதவியால் பாடசாலை வளாகத்தில் நாவல் , நெல்லி மற்றும் விளாமர கன்றுகள் மாணவர்களால் நாட்டபட்டன.
திருகோணமலை மூதூரில் உள்ள சந்தனவெட்டை கிராமத்தில் மிகவும் நலிவடைந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையான ஶ்ரீ ஐங்கரன் வித்தியாலத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான நிழல்கள் அமைப்பின் நிதியுதவியுடன் Trinco Aid நிறுவனத்தினூடாக நாவல் , நெல்லி மற்றும் விளாமர கன்றுகள் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை வளாகத்தை சுற்றி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் நாட்டப்பட்டன.
மரங்கள் நாட்டும் நிகழ்வில் Kasthoori Collection நிறுவனத்தின் பணிப்பாளர் Lion.Kishore , Green future world foundation தலைவர் Dr.Sajithira, Trinco aid நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஐக்கோண் ஹரிகரன் அந்நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திரு.பிரபா மற்றும் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.