அண்மையில் புதிதாக கட்டப்பட்ட தொண்மாடைனாறு வளர்மதி முன்பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழாவும் விளையாட்டுப் போட்டிவும் இன்று பிற்பகல் மணிக்கு இடம்பெற்றது.
தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்றத்தின் அன்சரனையுடன், தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் தலைவர் திரு.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.தில்லைநாதனும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.ஜெயக்குமார் (தலைவர், தொண்டைமானாறு லண்டன் நற்பணி மன்றம்) மற்றும் திரு.S.பிரசாத் (செயலர், நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்).
புதிய கட்டடத் திறப்பு விழாவைத் தொடர்ந்து முன்பள்ளியின் இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.