3. கீழே காட்டப்பட்டுள்ள பகுதியில் "Tamil", "I agree to the Google Terms of Service andPrivacy Policy" போன்றவற்றுக்கு எதிரே சரி (Tick) செய்து "Download" என்ற Button இனை அழுத்தவும்.
4. கீழே காட்டப்பட்டுள்ள மென்பொருள் உங்களது Computer இல் தரவிறக்கபட்டிருக்கும், இதை உங்களது Computer இல் நிறுவ (Install) வேண்டும்.
5. Install முடிந்தால் கீழே காட்டப்பட்டுள்ள Message காட்டும் .
6. பின்னர் உங்களுக்கு தேவையான இடத்தில நீங்கள் தமிழில் தட்டச்சு (Type) செய்ய வேண்டுமாயின் Keyboard இல் உள்ள Alt + Shift ஆகிய கீ (Key) களை ஒன்று சேர அழுத்தவும். அப்படி அழுத்தும் போது கீழே காட்டப்படுள்ளது போல் "த " என்ற எழுத்து வரும்.
7. உங்களுக்கு வேண்டிய இடத்தில் (Facebook, Email, Skype, Website Forms, MS Word, Notepad,... etc) நேரடியாக தமிழில் தட்டச்சு (Type) செய்யலாம்.
8. ஆங்கிலம் தேவை என்றால் நீங்கள் மீண்டும் Keyboard இல் உள்ள Alt + Shift ஆகிய கீ (Key) களை ஒன்று சேர அழுத்தவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
செந்தில் (Sri Lanka)
Posted Date: March 31, 2015 at 16:30
மிக்க நன்றி, நீண்ட நாள் சந்தேகம் இன்று எனக்கு நன்கு தெளிவுபடுத்தியதை இட்டு மனமகிழ்ச்சி அடைகிறேன்.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 31, 2015 at 11:53
வணக்கம் ஐயா,
நீங்கள் இன்று புதிய இணையத்தள இணைப்பான http://www.google.com/inputtools/windows/ என்ற இணைப்பினூடாக எமக்கு கற்பித்துள்ள தமிழில் தட்டச்ச செய்வது எப்படி என்ற புதிய கல்வி முறையினால் மேலும் இலகுவாகவும் விரைவாகவும் என்னால் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் என்னால் ஆங்கில தட்டச்சு பலகையின் துணை இல்லாமல் கணணியின் திரையில் தோன்றும் தமிழ் தட்டச்சு பலகையை பாவித்தே இலகுவாகவும் மிகவிரைவாகவும் தமிழில் தட்டச்சு செய்து எழுத முடிகின்றது. மேலும் என்னால் விரும்பிய இடத்திற்து நேரடியாக போய் தமிழில் எழுதக்கூடியதாக இருக்கிறது. அதாவது Facebook, e-mail, MS Word, Notepad போன்ற கணணியின் மக்கள் தொடர்பாடர் சாதனங்களுக்கு எல்லாம் போய் Cut and Paste என்ற தொழில் நுட்பத்தை பாவிக்காமல் என்னால் நேரரடியாகவே தமிழில் எழுதக்கூடியதாக இருக்கிறது.
தற்போழுது எனது இந்த கருத்தினைக்கூட கருத்து எழுதுவதற்காக நீங்கள் எமக்கு வடிவமைத்து தந்திருக்கின்ற நீள்சதுர வடிவிலான கருத்து எழுதும் பெட்டிக்கு வந்து நேரடியாகவே எனது கருத்தினை தமிழில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறாக பல வழிகளிலும் இன்று நீங்கள் எமக்கு கற்பித்துள்ள புதிய கல்விமுறை எமக்கு தமிழில் தட்டச்சு செய்யும் ஆற்றலை வளர்த்திருக்கிறது.
உங்களது இந்த மிகப்பெரிய பேருதவிக்கு எனது உளமார்ந்த நன்றிகள் ஐயா.
உங்களது தமிழ் தொண்டு என்ற தியாக தீபம் ஞாயிறு ஒளிபோல் தமிழ் இதயங்களில் எல்லாம் பரவி செந்தமிழ்ச்சுடருடன் தமிழ் ஒளிர்விட வேண்டும் என்ற வேனவாவுடன் விடை பெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்
Rajkumar periyathamby (canada)
Posted Date: March 31, 2015 at 10:26
வல்வெட்டித்துறை.o.r.g குடும்பத்தினருக்கு நன்றி ..நன்றி ..நன்றி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.