பாக்கு நீரிணையை நீந்தி உலக சாதனைககள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் விளையாட்டுத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவர எண்ணியுள்ளேன் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.
ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்தி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அந்த அந்த பகுதி கால நிலைக்கு ஏற்ப நீச்சல் தடாகம் போன்ற விளையாட்டுத்துறைக்கான வசதிகளுக்கான திட்டம் முன்னெடுக்கப்படும் ஏன்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று குறிப்பிடுகையிலேயே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
மாத்தளை ஹொக்கி மைதானம் புனரமைக்கப்படவுள்ளதுடன் நுவரெலியாவில் அதி உன்னத விளையாட்டு மைதானம் இவ்வருடம் அமைக்கப்படும். 5 ஆயிரம் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இவ்வருடம் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.