சிறப்பாக இடம்பெற்ற காவற்காரன் மடை! கள், சாராயமும் படைப்பு !!
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2017 (திங்கட்கிழமை)
வல்வை உதய சூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை வைத்து சிறப்புப் பூசையுடன் கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மடையின் ஒரு அங்கமாக உள்ளூர் மதுபானமான "கள்" மற்றும் இறக்குமதி செய்யப்படும் மதுபானமான 'Red Label' சாராயமும் படைக்கப்பட்டிருந்தன.
மாலை 0730 மணியளவில் இடம்பெற்ற பூசையை தொடர்ந்து, பிரத்தியேகமாக செய்யப்பட்ட மிகச் சிறிய கப்பல் வடிவ உருவில் படைக்கப்பட்ட உணவின் ஒரு பகுதி கடலில் செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு படையல் வழங்கப்பட்டது.
இதே போன்ற குறித்த நிகழ்வு பல ஆண்டுகள் முன்னர் வல்வையின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுவந்தாலும், காலப் போக்கில் அருகிவிட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.