ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் (United Nations human rights council) 34 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 24 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை மனித உரிமை மீதான சிறப்பு மறுவிவாதம் மார்ச் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் மார்ச் 08 ஆம் திகதி இலங்கை சம்பந்தமாக சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் (International non governmental organization) தமது பிரச்சனைகளை முன்வைக்கவுள்ளார்கள்.
சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் பிரதிநிதியாக திரு.சிவாஜிலிங்கம் பங்குபற்றவுள்ளார். ஆனாலும் இதுபற்றிய இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை நேற்று முன்தினம் ஜனாதிபதி வருகையையொட்டி யாழில் காணாமல் போணவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து திரு.சிவாஜிலிங்கம் மேற்கொண்ட எதிர்ப்பு ஊர்வலத்தின் காணொளி தற்பொழுது இணையதளங்களில் பரவிவருகின்றது.
'இன்றைய ஆட்ட நாயகன் ஆனார் சிவாஜிலிங்கம்' aSrilanka.com என்னும் தலைப்பில் வெளியான காணொளியை கீழ் உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.