நேதாஜி கடற்கரை மைதான புணரமைப்பிற்கு சிவாஜிலிங்கம் 5 லட்சம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதான புணரமைப்புக்கு ரூபா 5 லட்சம் நிதியுதவியினை தனது மாகாண சபை நிதியிலிருந்து வழங்கவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிதி எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்தே ஒதுக்கப்படவுள்ளது.
குறித்த நிதியைக் கொண்டு நேதாஜி கடற்கரை மைதானத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் வகையில் கட்டுமானங்கள் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.