திக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் சென்ற ஆட்டோ
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2017 (புதன்கிழமை)
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பிரதான வீதியில் பொலிகண்டிப் பக்கமாக மூவருடன் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பாதுகாப்பு தூண் ஒன்றை உடைத்து, வீதியை விட்டு விலகி கடற்பக்கமாகச் சென்றுள்ளது. ஆனாலும் குறித்த சம்பவ நேரம், நீர் வற்று என்பதாலும், முருகைக் கற்கள் காரணமாகவும், முச்சக்கர வண்டி மேலும் கடல் நீர் பக்கமாகச் செல்வது தவிர்க்கபட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்ததுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் திக்கத்திற்கும் பொலிகண்டிக்கும் இடையில் பொலிகண்டி ஆலடியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.