8 கோடி செலவில் தீருவில் பூங்கா திட்டம், உறுதிப்படுத்த அமைச்சர்களிடம் சிவாஜிலிங்கம் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2018 (வெள்ளிக்கிழமை)
சுமார் 85 மில்லியன் ரூபா செலவில் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவை புணரமைக்க முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தை உறுதிப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் (Minister of tourism development and christian religious affairs) அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை நேரில் சந்தித்து குறித்த வேண்டுகோளை சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளார்.
சுமார் 85 மில்லியன் ரூபா செலவில் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவை புணரமைக்க முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் கடந்த 19 ஆம் திகதி வட மாகாணசபை முதல்வர் அலுவலகத்தில் முதல்வரின் செயலருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றையடுத்தே தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், நகரசபை தலைவர் கருணானந்தராசா, நகரசபை செயலர் திரு.பிரசாந்த், சுஜேட்சைக் குழு தலைவர் திரு. செல்வேந்திரா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர்களுடன் கட்டடக் கலை நிபுணர்கள் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுற்றுலாத் துறைக்கு என உலக வங்கி, மாகாண சபை களுக்கென நிதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.