பொலிகை பாரதி உதைபந்து - சம்பியன் ஆனது பலாலி விண்மீன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2016 (திங்கட்கிழமை)
பொலிகண்டி பாரதி விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திய உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் 01.10.16 அன்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது. இறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
முதல் பாதியாட்டத்தில் பரபரப்பாக ஆடியது இரு அணிகளும் 5வது நிமிடத்தில் யங்ஹென்றீஸ் வீரர் தனேஸ் கோல் பெற அசத்த அடுத்த 8வது நிமிடத்தில் விண் மீன் அமலதாஸ் கோல் பெற ஆட்டம் சமநிலைப்படுத்தினார்.முதல் பாதியாட்டம் 01:01என்ற அடிப்படையில் நிறைவுற்றது.
இரண்டாவது பாதியில் இலகுவான கோல் வாய்ப்பை யங் ஹென்றீஸ் வீரர் தவற விட்டனர் விண் மீன் வீரர் டேமியன் காண்டிபன் சிறப்பாக ஆடினர். இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போடாத நிலையில் இரண்டாவது பாதி நிறைவுற்றது. இறுதியாட்ட நேர முடிவில் ஆட்டம் சமநிலையானது வெற்றியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 4:2 என்ற ரீதியில் யங்ஹென்றீஸ் அணியை விழ்த்தி பொலிகை பாரதியின் வெற்றிக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது பலாலி விண் மீன். ஆட்ட நாயகன் விண் மீன் யூட் கெனடி தெரிவு செய்யப்பட்டார்.
உதைப்பந்தாட்ட தொடரின் 3ம் இடத்திற்கான ஆட்டத்தில் நவஜீவன்ஸ் அணி எதிர் யங்கம்பன்ஸ் அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாத நிலையில் முதல் பாதியாட்டம் நிறைவுற்றது. இரண்டாவது பாதியாட்டத்தின் 30வது நிமிடத்தில் நவஜீவன்ஸ் வீரர் சங்கர் அணியின் வெற்றிக் கோலை பெற இறுதி ஆட்ட நேர முடிவில் 01:00 என்ற ரீதியில் யங்கம்பன்ஸ் அணியை வீழ்த்தியது நவஜீவன்ஸ் அணி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.