கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்துவந்தவருமான ராஜேஸ்வரி விஜயகுமார் (28 - 02 -2017) செவ்வாய்க் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற S.V நடராஜா மகாலட்சுமி ஆகியோரின் மருமகளும்,
விஜயகுமாரின் (துரை) பாசமுள்ள மனைவியும்,
பிரியதர்ஷினி, நடராஜா(மதன்), விஜயதர்ஷினி, விஜேந்திரகுமார் ஆகியோரின் பேரன்புமிக்க தாயாரும்,
கேதீஸ்வரன், முத்தமிழ்ராஜினி, அரவிந்தகுமார், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக் ஷயன், ராஜித், மகீபன், சுபநயனா, யாழவன், ரீத்தீஸ்குமார், ஹனிஷ்கா, ஸ்ரீமகாலக்ஷ்மி, வருண், ஷிவாணி ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற பேராசிரியர் சிவத்தம்பி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சோமாஸ்கந்தராஜா ஆகியோரின் சகோதரியும்,
ரூபவதி, சரோஜினிதேவி, சாரதாதேவி, நிர்மலாதேவி, சுரேஸ்குமார், வத்சலாதேவி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், ஆழ்வாப்பிள்ளை, திருநாவுக்கரசு மற்றும் பத்மராணி ஆகியோரின் மைத்துணியும்
காலஞ்சென்ற தேவசிகாமணி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற தேவசிகாமணி, பவானி, மோகனசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 01 - 03 - 2017 மாலை 05.30 மணியிலிருந்து இரவு 08.30 மணி வரையும், மற்றும் 02 - 03 - 2017 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின் மாலை 04.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
shivaleelan.s (United Kingdom)
Posted Date: March 02, 2017 at 19:15
மிகவும் இக்கட்டான அதிகாலைவேளையில் என்னுயிர் காத்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். அத்துடன் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிவலீலன்.சி
shivaleelan.s (United Kingdom)
Posted Date: March 02, 2017 at 19:09
மிகவும் இக்கட்டான அதிகாலைவேளையில் என்னுயிர் காத்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன். அத்துடன் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிவலீலன்.சி
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: March 02, 2017 at 04:55
நாமும் துயரில் பங்கு கொள்கிறோம்:
தம்பி விஜயகுமார் (துரை) அவர்களின் துணைவியாரை, நாம் எல்லாம் ராசு அக்கா என அழைக்கும் அவரின் பிரிவுத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவர் பிள்ளைகள், குடும்பத்தினர் எல்லோருடன் நாமும் பங்கு எடுத்து, அவரின் ஆத்மா சாந்தி அடைய ஆற்றங்கரை வேலவன் துணை வேண்டுகிறோம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.