சிவாஐிலிஙகத்தின் ஏற்பாட்டில் 15 லட்சம் செலவில் சிதம்பராவிற்கு புதிய கூடைப்பந்தாட்ட மைதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2017 (திங்கட்கிழமை)
வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஐிலிஙகத்தின் ஏற்பாட்டில், வல்வை சிதம்பரக் கல்லூரிக்கு ரூபா 15 லட்சம் செலவில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.
இதன் ஆரம்ப கட்ட வேலைகள் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையில் குறித்து ஒதுக்கப்படும் (Criteria based ground) 60 லட்சம் ரூபா நிதியில், திரு.சிவாஜிலிங்கம் கடந்த வருட நிதியில் ரூபா 3 லட்சமும் இந்த வருட நிதியில் ரூபா 5 லட்சமும் ஒதுக்கியுள்ளார்.
குறித்த புதிய கூடைப்பந்தாட்ட மைதானம் சிதம்பரக் கல்லூரியின் மத்திய பகுதியில் அமையவுள்ளது. கீழே படங்களில் கூடைப்பந்தாட்டம் அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S Rajendra (uk)
Posted Date: January 13, 2017 at 22:42
Why can't this be built in the land purchased?
Who gave the building permission?
Has anybody understood or assessed the long term consequences.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.