வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்திய Northern Challengers cup -2016 மாபெரும்உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு மின்னொளியில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம் 1.0 என்ற ரீதியில் வென்று நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் Northern Challenger பட்டத்தை வென்றதோடு இரண்டு லட்ச ரூபா பணத்தையும் தட்டிச்சென்றனர்.
ஞானமுருகன் அணி இரண்டாமிடத்தை தனதாக்கி ஒரு லட்சம் ரூபா பணத்தினையும் கேடயத்தினையும் பெற்றுக்கொண்டது.
மூன்றாம் இடம் மன்னார் ஜோசப்வாஸ் ஜக்கிய விளையாட்டுக் கழகம்
உதைப்பந்தாட்ட தொடரின் மூன்றாமிடத்தில் மோதியது குருநகர் பாடும்மீன்கள் வி.க எதிர் மன்னார் ஜோசப்வாஸ் ஜக்கிய வி.க. முதல் பாதியாட்டத்தில் மன்னார் ஜோசப்வாஸ் ஜக்கிய வி.க இரண்டு கோல்களை போட்டு அசத்த பதிலுக்கு தமது அணியின் முதல் கோலினை பதிவு செய்தது குருநகர் பாடும்மீன்கள் வி.க முதல் பாதி 02:01என்ற அடிப்படையில் நிறைவுற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தில் குருநகர் பாடும்மீன்கள் வி.க கோல் போட்டு ஆட்டத்தினை சமப்படுத்திய ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அசத்தலான கோல் ஒன்றை போட்டார் ஜோசப்வாஸ் வி.க வீரர் ஜோன்சன் இறுதியாட்ட நேர முடிவில் 03:02என்ற ரீதியில் வெற்றியீட்டி மூன்றாமிடத்தினை தனதாக்கியது மன்னார் ஜோசப்வாஸ் ஜக்கிய வி.கழகம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.