வட கிழக்கு பிறீமியர் லீக் - இன்றைய போட்டியில் வல்வை எப்.சி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2018 (புதன்கிழமை)
வடகிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டத் தொடரில் இரண்டாம் வார மூன்றாவது ஆட்டம் இன்று இரவு மின்னொளியில் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தம் வல்வை எப்.சி அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் கிளீயூர் கிங்ஸ் அணி மோதியது.
வல்வை எப்.சி அணியில் ஞானரூபன், பிறேம்குமார் (பீமா),கலிஸ்ரர், அகீபன், திலிபன், உட்பட யாழின் முன்னனி வீரர்கள் மற்றும் இலங்கை தேசிய அணி வீரர்கள் கொண்டிருந்த அதேவேளை கிளீயூர் கிங்ஸ் அணியில் ஜொப் மைக்கல், அஜந்தன், பிரதீஸ், எட்வின் உட்பட கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னனி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்து இருந்ததால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் வல்வை எப்.சி அணி இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் ஒரு கோலினைப் பெற்று வல்வை எப்.சி வெற்றி பெற்றது.
வல்வை எப்.சி அணி சார்பாக பீமா, ஞானம் மற்றும் கசுன் ஆகியோர் தலா ஒரு கோலினைப் பெற்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.