உள்ளூராட்சி தேர்தல் – யாழில் வல்வை உட்பட 4 தொங்குசபைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், யாழ்பாணத்தில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஆகியன எந்தக் கட்சியனதும் பெரும்பான்மை இன்றி தொங்கு சபைகளாக மாறியுள்ளன.
வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தமிழரசுக் கட்சி முதலாவது இடத்திலும், சுயேட்சை இரண்டாவது இடத்திலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதலாவது இடத்திலும், தமிழரசுக் கட்சி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.