இன்று பிரமாண்ட மின்னொளியில் நெடியகாடு சூப்பர் 8 உதைபந்து ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2017 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இன்றைய தினம் (16-02-2017) சூப்பர் 8 சுற்று லீக் போட்டிகள் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் 'வட இலங்கை புகழ் நெடியகாடு கணபதி மின் அமைப்பாளர்களின்' மின் ஒளியில் பின்வரும் பலம் மிக்க அணிகள் பங்குபற்றும் போட்டிகள் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரவு 7 மணிக்கு குருநகர் பாடும்மீன் வி.க எதிர் மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய அணியும், இரவு 8 மணிக்கு இளவாலை யங்கென்றீஸ் எதிர் மன்னார் யோசப் வாஸ் நகர் ஐக்கிய அணிகள் மோதவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.