முரளி ஞாபகார்த்த உதைபந்து - வல்வை புளூஸ் பிரான்ஸ் அணி சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2017 (புதன்கிழமை)
நேற்றைய தினம் பிரான்சின் தலைநகர் பாரிஸ் லாக்குர்நேவ் இல் யாழ்டன் உதைபந்தாட்டக் கழகத்தினால் பதினாறாவது ஆண்டாக நடத்தப்படும் அல்ஃப்ரட், ஈழவீரன் மற்றும் பாலச்சந்திரன் நினைவாக உதபந்தாட்டப் போட்டி நடாத்தப் பட்டது.
பிரான்சு நாட்டில் இடம்பெற்றுவரும் பல விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றிய இப்போட்டியில் வல்வை புளூஸ் பிரான்சு விளையாட்டுக் கழகமும் பங்கு பற்றி விளையாடியது.
A பிரிவில் யாழ்டன், விண்மீன்கள், அரியாலை ஆகிய அணிகளுடனான சுற்றுப் போட்டியில் விளையாடி யாழ்டன் அணியுடன் தமது பிரிவிலிருந்து காலிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.
அரியாலை அணியுடனான ஆட்டத்தில் 2 - 0 என்ற கோல் கணக்கிலும் விண்மீன்கள் அணியுடனான ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல்கணக்கிலும் அரையிறுதிக்குத் தகுதி பெறனர்.
அரையிறுதியில் நல்லூர் ஸ்தான் அணியுடன் 2 - 0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் யாழ்டன் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய யாழ்டன், வல்வை புளூஸ் பிரான்சு இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பகுதி நேரத்தில் கோல்கள் அடிக்காத நிலையில் இடைவேளைக்குப் பின்னரான இரண்டாவது பகுதி நேரத்திலும் இரு அணிகளும் பலமாக மோதின.
இறுதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் அடிக்காமல் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. பின்னர் காலம் தாமதமான நிலையில் போதிய வெளிச்சமின்மை கருதி ஆட்டம் தண்டவுதை பகுதிக்குத் தள்ளப்பட்டது. தண்டவுதை ஆட்டத்தில் வல்வை புளூஸ் அணியினர் அனைவரும் கோல்கள் அடித்த நிலையில் யாழ்டன் அணியினர் தண்டவுதையில் ஏழு பந்துகளில் ஒரு பந்தினை வல்வை புளூஸ் அணியின் காப்பாளர் தடுத்தமையினால் போட்டி 7 - 6 என்ற கோல் கணக்கில் வல்வை புளூஸ் அணியினர் வெற்றியைத் தமதாக்கி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
உதைபந்தாட்டச் சுற்றுக் கிண்ணப் போட்டியின் தொடர் நாயகனாக வாசு மற்றும் ஆட்ட நாயகனாக ரமணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் வல்வை புளூஸ் பிரான்சு அணியின் தளரா நம்பிக்கையும் ஆட்டத்தின் தொடக்கநிலையில் ஊடகத்திற்கு அளித்திருந்த வெல்வோம் என்ற உத்வேகமும் கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Appasamy Jeevakan (France)
Posted Date: June 08, 2017 at 00:37
Congratulation
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.