யாழ் டொரன்டோ இடையிலான அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்து, முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய டொராண்டோ மேயர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2017 (திங்கட்கிழமை)
கனடாவின் டொரன்டோ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கையொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் கனடாவின் டொரன்டோ மேயர் ஜோன் டோரி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய டொராண்டோ மேயர்
இதேவளை இலங்கை வந்த கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகர மேஜர் ஜோன் ரெறி முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்துள்ளார்.
முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்த அவர் அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரில் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த பயணத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்ததாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.