உள்ளூராட்சி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு 25, 26 திகதிகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2018 (சனிக்கிழமை)
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்குப்பதற்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 560,000 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளைஇ “தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் எதிர்வரும் 8ஆம் திகதியன்று அத்தாட்சிப் படுத்தப்படும்” என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார். “அதன்பின்னர் தபால் வாக்களிப்புக்கான
பொதிகள் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.