சட்டத்தரணி கனகமனோகரனின் 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' நூல் வெளியீடு கொழும்பில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையை சேர்ந்த எழுத்தாளர் கனக மனோகரன் (சட்டத் தரணி) எழுதிய 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' என்னும் நூல் வெளியீடு நேற்று கொழும்பிலும் இடம்பெற்றது. பம்பலப்பிட்டிசரஸ்வதி மண்டபம்த்தில் நேற்று மாலை, தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி திரு.மு.ஏ.தவராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர் சட்டத்தரணி திரு. மு.ஏ.மகாதேவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் வரவேற்புரையை திரு. ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன் அவர்களும் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்), ஆசியுரையை சிரேஷ்ட சட்டத்தரணி திரு.க.நீலகண்டன் அவர்களும் (தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்), நூல் வெளியீட்டுரையை சிரேஷ்ட சட்டத்தரணி திரு.ஜி.இராஜகுலேந்திரா அவர்களும் (துணைத்தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) மேற்கொண்டனர்.
நூலை தமிழரசுக் கட்சி கொழும்புக்கிளை செயலாளர் திரு.சி.இரத்தினவடிவேல் அவர்கள் வெளியிட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: September 12, 2017 at 02:43
நண்பன் மனோகரா ! உமது வாழ்நாளில் தமிழ் அரசியலுக்காகவும், தமிழுக்காகவும் நீ செலவு செய்த காலங்கள் அளவிடமுடியாதது. உன் சாத னைகளையும் தொண்டுகளையும் வரும்கால சமுதாயத்தினருக்கு நூலாக வல்வையிலும், யாழ்நகரிலும், கொழும்பிலும், வெளியிட்டு கனடாவிலும் வெளியிடுவது வல்வையின் புகழ் உன்னால் பெருமை அடைகிறது. உமக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.