கட்டி அப்பா ஞாபகார்த்த உதைபந்து - வெற்றிக்கிண்ணத்தை ரேவடி சுவீகரித்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2017 (புதன்கிழமை)
வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தின் அமரர் சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.
தீருவில் மைதானத்தில் இன்று மாலை 0500 மணியளவில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக் கழகம் மோதியது.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரேவடி அணி 2 கோல்களைப் பெற்று முன்னிலையில் இருந்த போதிலும் ஆட்ட முடிவில் நேதாஜி அணியும் 2 கோல்களைப் பெற, ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
வெற்றியைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட, ரேவடி அணி இதில் வெற்றி பெற்று, கிண்ணத்தைச் சுவீகரித்தது.
சுற்றுத் தொடரின் நாயகனாக நேதாஜி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தர்சனும், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ரவியும் தெரிவு செய்யப்பட்டனர்.
சிவனடியார் சிவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டி தொடர்ந்து மூன்றாவது வருடம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் முழுப் படத் தொகுப்பையும் கீழ்வரும் எமது 'வல்வை இணையம்' Facebook' பக்கத்தில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.