வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரகல் கனடாவில் மாகாண உப தேர்தலில் வேட்பாளராக நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருஞானசுந்தரம் பிரகல் என்னும் இளைஞர் கனடாவில் ஸ்கார்புரோ றோஜ் ரிவர் மாகாண உப தேர்தலில் (Scarborough-Rouge River provincial by election) லிபரல் கட்சியின் புதிய வேட்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
கனடாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் வேட்பாளர் பிரகல், தான் ஸ்கார்புரோ பகுதியின் சமூக சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பில் மேலும் வளர்ச்சியைக் கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ளார்.
இதே தொகுதியில் முன்னர் ராதிகா சிற்சபேசன் போட்டியிட்டிருந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரகல், யோர்க் பல்கலைகலைக் கழகத்தில் பொதுக் கொள்கை, நிர்வாக மற்றும் சட்டத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் இவர் யோர்க் பகுதி அரசின் கீழ் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றார்.
திரு.பிரகல் வல்வையின் சமாதான நீதவான்களில் ஒருவரான திரு.அகமணிதேவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: June 12, 2016 at 10:50
வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.