இன்றைய நாளில் வல்வையில் - ஞானமூர்த்தி தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2014 (புதன்கிழமை)
வல்வெட்டிதுறையின் பிரதான கடற்கரைகளில் ஒன்றாயும் பல அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் கண்டிருந்த ரேவடிக் கடற்கரையில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் திரு.ச.ஞானமூர்த்தி தலைமையில் பிரமாண்டமான விழா ஒன்று இடம்பெற்றிருந்தது.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி, இரண்டாவது பிரதான கட்சியாக தோற்றம் பெற்றமைக்கு, குறித்த கூட்டணியை உருவாக்க முன்னின்று உழைத்த வல்வை மக்களால் இந்த பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வல்வை ரேவடிக் கடற்கரையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.