நாடளாவிய ரீதியில் தரம் 5 ற்கான புலமைப் பரிசில் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பழைய முறைமைக்கு அமையவே நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஒரு வினா பத்திரத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்திருந்தது. எனினும் பழைய முறைமைக்கு அமைய இந்த ஆண்டு பரீட்சையை நடத்துவதற்கு, பின்னர் பரிந்துரை செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.