வாரம் ஒரு பழங்கதை – பட்டினமும் நகரமும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2015 (வியாழக்கிழமை)
எமது உள்ளூர் நிர்வாக அமைப்பு பட்டினசபையாக மாற்றம் பெறமுன்னர், யாழ்பாணத்திலிருந்து இயங்கிய சுகாதாரச் சங்கம் (Board of health), சிறுநகர் சுகாதாரச்சபை, (Small town sanitary board) என்னும் உள்ளூராட்சி அமைப்புக்களினால் வல்வையின் சுகாதாரப் பணிகள் பேணப்பட்டு வந்திருக்கின்றது.
வாடி ஒழுங்கை
01-01-1947 இல் முதன்முறையாக வல்வை பட்டினசபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வாக்கிக்கப்பட ஆரம்பித்த பின்னரே பட்டினத்தின் வேலைத் திட்டங்கள் படிப்படியாக முன்னேற்றம் பெற்றன.
பட்டினசபை 5 வட்டாரங்களைக் கொண்டிருந்தது.
பஜார் வட்டாரம்
1) வாடி வட்டாரம்
பாய்க்கப்பல் தொழில் சார்ந்த இடமாக வாடி “”வான்” பகுதியும் “வாடி ஒழுங்கை” யும் இருந்தமையால் இது “வாடி வட்டாரம்” எனப் பெயர்பெற்றது. பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதியின் வடக்காக சிதம்பரவிலிருந்து சந்தி ஒழுங்கை வரையிலானது இதன் எல்லை.
மறைந்த க.சபாரத்தினம் மற்றும் திரு.சுந்தரமணி ஆகியோர் இதன் அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
புதிய நகரசபை
2) ரேவு வட்டாரம்
நமது பாரம்பரிய பாய்க்கப்பற் தொழிலின் அச்சாணியாக இருந்த ரேவுத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி இது “ரேவு வட்டாரம்” எனப் பெயர்பெற்றது. வீதிக்கு வடக்காக சந்தி ஒழுங்கையிலிருந்து இந்திராணி வைத்தியசாலை வரையிலானது இதன் எல்லை.
மறைந்தவார்களான S.S.சுந்தரலிங்கம், நடராசா (நடராசா வீதி என இவர் பெயரில் ஒரு வீதியும் உண்டு), து.நவரெத்தினம் மற்றும் M.V.இரத்தினவடிவேல் ஆகியோர் வட்டார அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
அமரர் ஐயாமுத்து திருப்பதி
3) பஜார் வட்டாரம்
பழைய சந்தையையும், சந்தியில் இயங்கிய கடைத் தொகுதிகளையும் கருதி “பஜார் வட்டாரம்” எனப் பெயர் வந்திருக்கவேண்டும். பருத்தித்துறை – யாழ்பாணம் வீதி இரண்டுக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமான பகுதி இதன் எல்லை.
மறைந்தவர்களான நா.வேலாயுதம் (புரக்கர்), பொ.வேலும்மயிலும் (சிவபெருமான்), ச.நடனசிகாமணி, மற்றும் சூதலிங்கம் ஆகியோர் இந்த வட்டாரத்தின் அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
4) கோவில் வட்டாரம்
சண்முகப்பிள்ளை நடனசிகாமணி
வலமும் இடமுமாக அருகருகே அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் சிவன் – அம்மன் கோவில்கள் அமைந்துள்ள காரணத்தால் இது “கோவில் வட்டாரம்” எனப் பெயர்பெற்றது. உடுப்பிட்டி வீதிக்கும் காங்கேசந்துறை வீதிக்கும் இடைப்பட்ட சிதம்பரா வரையிலான மேற்குப் பகுதியை இது எல்லையாகக் கொண்டது.
மறைந்தவர்களான ந.சு.இராசேந்திரம், ச.நாராயணசாமி மற்றும் திரு.தி.நவரெத்தினம் (மெம்பர் நவரெத்தினம்) ஆகியோர் அங்கத்தவர்களாக இருந்துள்ளனர்.
5) வேவில் வட்டாரம்
வேவில் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றாடலையும் உள்ளடக்கிய பகுதியாக இது அமைந்தமையால் “வேவில் வட்டாரம்” எனப் பெயர் பெற்றது. மறைந்த பாக்கியலிங்கம் பல தடவைகள் இந்த வட்டாரத்தின் அங்கத்தவராக இருந்துள்ளார்.
மொத்தத்தில் கிழக்கு மேற்காக வைத்தியசாலையிலிருந்து சிதம்பரா வரையும், தெற்காக (மக்கள் வங்கி அருகேயுள்ள) மதவடி வரையான பகுதிகளே பட்டினசபையின் எல்லைகளாக இருந்தன.
அமரர் சோமசுந்தரம் சுந்தரலிங்கம்
மேற்குறித்த 3 ஊர் எல்லைகளிலும் "Valvettiturai speed limit 20 miles" என்னும் சீமெந்திலான பெயர் குறிப்புப் பலகை ஆங்கிலத்தில் எழுதப்பட்டபடி நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனாலும் எல்லை விஸ்தரிப்பின் பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டன.
முக்கிய குறிப்பு
வட்டார அங்கத்தவர்களாக இருந்து மக்கள் பணி புரிந்தவர்களின் பெயர்களை கூடுமானவரை சரியாகத் தந்துள்ளோம். ஏதாவது பெயர்கள் விடுபட்டிருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்.
அமரர் இளையதம்பி அப்புக்குட்டியாபிள்ளை
பொது சுகாதாரம், வீட்டு வரி – காணி வரி வசூலித்தல், சந்தைகளின் பராமரிப்பு, மின்சாரம் வழங்குதலும் மின் கட்டண வசூலிப்பும் ஆகியானவே பட்டினசபையின் பிரதான பணிகளாக இருந்துவந்தன.
ஆரம்ப காலத்தில் பருத்திதுறையிலிருந்து மின்சாரம் பெறப்பட்ட போதிலும், பின்னர் 2 மின் பிறப்பாக்கிகளைச் சொந்தமாக வாங்கி, பழைய சந்தைப் பகுதியில் (இப்போதைய நவீன சந்தையின் தென் மேற்கு மூலை) வைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
1971 இல் “லக்சபான” மின் இணைப்பு பெறப்பட்டு, மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம் அவர்களால் ஆரம்பித்தும் வைக்கப்பட்டது. 27.01.1997 இல் மின்சாரம் சார்ந்த அனைத்தையும் மின்சாரசபை பொறுப்பேற்றுக் கொண்டது.
அமரர் கந்தசாமி சபாரெத்தினம்
பட்டினசபையின் தலைவர்களாக இருந்து மக்கள் சேவை புரிந்தோர் விபரம்.
1. அமரர் ஐயாமுத்து திருப்பதி (1957 – 1952)
இவரே பட்டினசபையின் முதற் தலைவர் என்னும் பெருமை பெற்றவர் ஆவார்.
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம் அவர்களின் பெருமுயற்சியினால் பட்டினசபையானது 01-06-1971 இல் “நகரசபை” என்னும் அந்தஸ்த்தைப் பெற்றது.
அமரர் விசுவலிங்கம் இரத்தினவடிவேல்
பட்டினசபையின் 5 வட்டாரங்களும் ஒரு சில எல்லை மாற்றங்களுடன் ஆறு வட்டாரங்கள் ஆயின. அவற்றுடன் பொலிகண்டியின் ஒரு பகுதி (கந்தவனம் பின் வீதிக்கு மேற்காகவுள்ள பகுதி, தொண்டைமானாறு (செல்வச் சந்நிதி முருகன் கோயில் உட்பட) மயிலியதானை உள்ளட்டக்கியதாக, நகரசபை 9 அங்கத்தவர்களைக் கொண்ட சபையாக ஏற்றங்கண்டது.
முன்னாள் பட்டினசபைத்தலைவரும் பா.ம உறுப்பினருமான க.துரைரத்தினம்
இதனால் வட்டாரப் பெயர்கள் அற்றுப் போக, வட்டாரம் 1, 2, ........ என இலக்கமிடப்பட்டன
(பட்டினசபையின் பழங்கதை நிறைவுபெற்றது. நகரசபையின் பழங்கதையுடன் கொஞ்சம் புதுக்கதையும் சேர்த்து அடுத்த வாரம் தொடரும்).
குறிப்பு
இதுவரை இவரின் 13 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.