அபிராமி அந்தாதி மூலத்திற்கு ஞானசுந்தரம் எழுதிய உரை நாளை வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2017 (வியாழக்கிழமை)
நாளை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் இடம்பெறவுள்ள அபிராமிப் பட்டர் திருவிழாவினத் தொடர்ந்து, அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி மூலமும் ஞானசுந்தரம் எழுதிய உரையும் என்னும் புத்தகம் முத்துமாரியம்மன் கோவிலில் மேற்படி கோவில் பரிபாலன சபையினரால் வெளியிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திரு.சிதம்பரப்பிள்ளை பசுபதி (ஒய்வு பெற்ற வருமான வரித் திணைக்கள உத்தியோகத்தர், ஒய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் மருதங்கேணி பிரதேச செயலகம், ஒய்வு பெற்ற பிரதேச சபை செயலாளர் (மந்திகை), பருத்தித்துறை பிரதேச சபை) அவர்கள் 'கோவலன் கண்ணகி நூலை' முத்துமாரியம்மன் கோவிலுக்குக்கு கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.