வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தீவிர தாழமுக்கம் (depression) காரணமாக நாட்டின் வட பகுதி உட்பட பல இடங்களில் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தாழமுக்கம் தற்பொழுது அகலாங்கு 15.5 பாகை, நெட்டாங்கு 93.0 பாகையில், அந்தமானின் போர்ட் பிளையர் (Port Blair) துறைமுகத்திற்கு சுமார் 300 கடல் மைல்கள் தொலைவில் நிலைகொண்டுள்ளதுடன், விரைவில் இது ஒரு ‘அதி தீவிர தாழமுக்கம்’ (deep depression) ஆக மாறவுள்ளது.
கடும் மழைக்கான வாய்புக்கள் உள்ள போதிலுல், குறித்த இந்த தாழமுக்கத்தினால், இலங்கைக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.