தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப்பூரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2016 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்பாளுக்கு காலை 09.30 மணியளவில் ஆரம்பமான விசேட அபிடேக, ஆராதனையைத் தொடர்ந்து நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன், 1130 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்றது.
ஆடிப்பூர திருவிழா (தமிழுக்கு) ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது அனுஸ்டிக்கப்படுவது வழமை. அத்துடன் இது அம்மனுக்குரிய திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.